பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைப் பாடல்கள் 123

தாய் வந்தீரோ ஐயோ இலைகொண்டுவந்தீரோ? தந்தால்என் பிள்ளை தலைஏறும் நஞ்சுதனை நீக்கலாம் இல்லையெனில் நீங்குமே பிள்ளையுயிர் வாய்க்குள் இலைச்சாற்றை வார்க்கவோ சொல்லுகின்றீர்?

(இலைச்சாற்றைப் பிள்ளைக்கு வார்க்கிறாள்)

மருத்துவிச்சி பிள்ளை விழித்ததுவே பெற்றவளே பார்த்தாயா, துள்ளி எழுந்ததுவே தூயவளே உன்பிள்ளை

சூழ்ந்திருந்தவர்களில் ஒருத்தி என்ன புதுமை இறந்தோன் உயிர்பெற்றான்! சின்னஞ் சிறியோன்திடுக்கென் றெழுந்தான்ே! மற்றொருவன் செத்தார் பிழைக்கவைக்கும் சின்னஇலை கொண்டுவந்த இத்தூய் மருத்துவருக்கென்கொடுத்தாலுந்தகுமே. தாடிநிறைந்த தள்ளாதவர் அன்புடையீர் என்றன் அருமை மருத்துவரே என்பேரன் உம்மால் பிறந்தான்், இறந்தபின்பு பாடெல்லாம் பட்டீர், பகலெல்லாம் வெய்யிலிலே காடெல்லாம் சுற்றிக் களைப்பில் மலையேறி வீழ்ந்துபுண்பட்டு விரைவில் குழந்தைநிலை ஆழ்ந்து நினைத்தேபின் அல்லலொடும் இங்குவந்தீர்? காத்தீர்! உமக்கென்ன கைம்மாறு வேண்டும், அதை ஆத்தாநீசொல்வாய் என் அன்பனே நீசொல்வாய்!