பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரிமைக் கொண்டாட்டமா? உரிமை மிகத் தொலைவில் இருக்கிறதே!

புல்வெளி, சிறிய குன்று, புனல்வற்றா ஓடை சார்ந்த நல்லதோர் காடு நோக்கி நடந்தனர் வேடர் சில்லோர். வல்வலை கட்டினார்கள்; விலங்குகள் வளைக்க லானார்; ஒல்லெனப் பறை தப்பட்டி ஒலித்தனர் காட்டில் எங்கும்! தாய்க்குதி ரைதன் குட்டிதன்னொடு நடுக்கம் எய்தி ஏய்ப்பவர் கட்டிவைத்த வலையினில் ஏகி வீழச், சாய்த்தனர் தரையில் வேடர்தாம்பினால் கட்டிச் சென்றார்: தாய் செல்லும் குட்டி செல்லும் தம்காட்டைப் பார்த்த வண்ணம் குட்டியைத் தாயை, வேடர் குப்பன்பால் விற்று விட்டார். அட்டியில் லாது குப்பன் அவைகளை வளர்த்து வந்தான்் குட்டிதான்் வண்டிக் காகும்; குதிரைவீண் என்று கண்டான். கொட்டிலில் தாய்வ ருந்திக் கிடந்தது காட்டை எண்ணி! மண்டிடு தீனி தின்று வளர்ந்திட்ட குட்டி தன்னை வண்டியிற் பூட்டலானார்! வருத்தத்தை வழக்க மாக்கிக் கொண்டது குட்டி ஓர்நாள் குடைசாய்ந்து போனதாலே வணண்டியாற் பட்ட பாட்டை வந்துதன் தாய்க்குக் கூறும்:

வண்டியிற் கட்டப் பட்டு வருந்திடுகின்றேன் நாளும்! புண்துடை தன்னிற் கொண்டேன்; புழுவெனத் துடித்தேன் அம்மா! கொண்டதோர் அடிமை தாளேன் குன்றொத்த வண்டி தன்னை அண்டாத நிலைமை பெற்றால் அதுவேஎன் உரிமை வாழ்வாம்! என்றது குதிரைக் குட்டி! இதற்குள்ளே குப்பன் வந்து குன்றுநேர் குட்டி தன்னை வண்டிக்குக் கொண்டு போனான். நின்றிடநேர மின்றி நெடுவண்டிதனை இழுத்துச் சென்றிடும் இவ்வாறாகச் சென்றன பத்துத் திங்கள்.