பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைப் பாடல்கள் 127

வண்டியை இழுக்கக் குட்டி மறுத்தது: கண்ட குப்பன் சண்டியே, இனிமேல் நீயோர் தனி “ஏறு குதிரை' என்றான் குண்டான் கூழ் பெற்ற ஏழை குதிப்பெனக் குதித்துக் குட்டி, வண்டியி னின்று பெற்ற விடுதலை வாழ்த்திற் றங்கே!

தன்ஏறு குதிரை மீது தான்்ஏறிக் குப்பன் செல்வான். மின்போல உடல் நெளித்து விரைமான்போல் ஓடும் குட்டி. பின்புறம் வண்டியில்லை பெற்றேநான் விடுதலைதான்் என்றெண்ணி மகிழும் ஓர்நாள் ஏகிற்றுத் தாயின் அண்டை. அம்மாநான் உரிமைப் பெற்றேன் அம்மாநான் மகிழ்ச்சி பெற்றேன் இம்மட்டும் நானடைந்த இன்னல்கள் நீங்கப் பெற்றேன். அம்மிசுண் டெலிமேல் ஏறி அமிழ்த்தல்போல் என்னை வண்டி இம்மண்ணில் இனிஅமிழ்த்தாதென்றது குதிரைக் குட்டி

கடிவாளத்தால் கிழிந்த கடைவாயில் குருதியாறு வடிந்திட எதிரில் நின்று மகிழ்ந்திடும் குட்டி தன்னை உடைந்தஉள்ளத்தால் நோக்கி உரைத்தது கிழத்தாய்: ஏ.ஏ அடிமையே உனைப் பிணித்த ஆங்கில வண்டியில்லை. வடக்குள குப்பன் உன்றன் வன்முதுகின்மேல் ஏறிக் கடிவாளம் இறுக்குகின்றான் கருதினாய் இல்லை! வாயில் வடிகின்ற குருதி காணாய்! வலிஉணர்கின்றாயில்லை அடிமையை வியந்தாய் உன்றன் அகத்தினில் இருளைச் சேர்த்தாய். வீழ்ந்தனை அடிமைச் சேற்றில் விடுதலை விழாமேற் கொண்டாய்! ஆழ்ந்துபார் உன்நாடெங்கே? அருங்கலை ஒழுக்கமெங்கே? தாழ்ந்து தாழ்ந்தெவனை நீபோய்த் தாங்கிட ஒப்புகின்றாய்? வாழ்ந்தநம் உரிமை வாழ்வை நினைக்கவும் மறுக்கின்றாயா?