பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைப் பாடல்கள் 11

என்றுரைத்தான்்குப்பன். இளவஞ்சி தான்்மகிழ்ந்து சென்று பறித்தாள். திரும்பிச்சிறிதுவழி வந்தார்கள். அங்கோர் மரத்து நிழலிலே சிந்தை மகிழ்ந்து சிறக்க அமர்ந்தார்கள்

  • ★ ★ மூலிகையிலே ஓர்இனத்தை முன்னே இருவருமாய் ஞாலத்துப் பேச்சறிய நாக்கிலிட்டுத்தின்றார்கள். வஞ்சிக்கும் குப்பனுக்கும் வையத்து மாந்தர்களின் 'நெஞ்சம் வசமாக நேரில் அவர் பேசுதல்போல் செந்தமிழில் தங்கள் செவியிற்கேட்கப்பெற்றார் அந்த மொழிகள் அடியில் வருமாறு:

★ x 丸 இத்தாலி தேசம் இருந்துநீஇங்கு வந்தாய் பத்துத் தினமாகப் பாங்காய் உணவுண்ண இவ்விடுதி தன்னில் இருந்து வருகின்றாய்! எவ்வாறு நான் சகிப்பேன் இந்தக் கருப்பன் எனக்கெதிரே உட்கார்ந் திருப்பதனை என்றாய்; தனக்கெனவே நல்உணவுச்சாலைஒன்றுண்டாக்கி அங்கவன் சென்றால் அடுக்கும்என உரைத்தாய்; இத்தாலிச் சேர்தரனே என்ன மதியுனக்கே? செத்து மடிவதிலும் சேர்ந்து பிறப்பதிலும் இவ் உலக மக்களிலே என்னபேதங்கண்டாப்2 செவ்வைபெறும் அன்பில்லார்தியபே தம்கொள்வார். எங்கள் பிரெஞ்சியர்கள் இப்பேதம் பாராட்டித் தங்கள் பழங்கீர்த்தி தாழ்வடைய ஒப்பார்கள்: பேதபுத்தி சற்றும் பிடிக்காது போ போ போ! பேதம்கொண்டோர்க்குப் பிராஞ்சில் இடமில்லை’

★ ★ x