பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைப் பாடல்கள் 13

எந்தவிதம் நீங்கி நம்மை எதிர்ப்பார்? இன்னமும், சிந்தனா சக்தி சிறிதுமின்றி மக்களுக்குத் தம்தோள் உழைப்பிலே நம்பிக்கை தான்ுமின்றி ஊறும் பகுத்தறிவை இல்லாதொழித்துவிட்டுச் சாறற்ற சக்கையாய்ச் சத்துடம்பைக் குன்றவைத்துப் பொற்புள்ள மாந்தர்களைக் கல்லாக்கி யேஅந்தக் கற்கள் கடவுள்களாய்க் காணப் படும்அங்கே. இந்த நிலையிற் சுதந்தரப் போரெங்கே? கொந்தளிப்பில் நல்லதொரு கொள்கை முளைப்பதெங்கே? தேகம் அழிந்துவிடும், சுற்றத்தார் செத்திடுவார்; போகங்கள் வேண்டாம்; பொருள் வேண்டாம் மற்றுமிந்தப் பாழுலகம் பொய்யே பரமபதம் போ என்னும் தாழ்வகற்ற எண்ணுங்கால் சாக்குருவிவேதாந்தம். சாதிப் பிரிவும் சமயப் பிரிவுகளும், நீதிப் பிழைகள் நியமப் பிழைகளும், மூடப் பழக்கங்கள் எல்லாம் முயற்சிசெய்தே ஓடச்செய்தால் நமையும் ஓடச்செய்வார் என்பேன்." இந்தப் பிரசங்கம் இவ்இருவர் கேட்டார்கள்; சொந்த நிலைக்குத் துயருற்றார், வஞ்சி சிலைபோல் இருந்தாள்; திகைத்தாள்; பின் நாட்டின் நிலையறிய நேர்ந்தது பற்றி மகிழ்ந்திட்டாள்! 'பச்சிலையைத் தந்த பருவதத்தைக் கும்பிட்டாள். 'இந்த இலையால் இனி நன்மை கொள்க' என்று சொந்தத் தாய்நாட்டுக்குச் சொன்னாள் பெருவாழ்த்து. 'வல்லமைகொள் பச்சிலையின் மர்மத்தைக் கண்டபடி சொல்லிஎன்னைத் தூக்கிவந்த சூட்சமத்தைக் காட்டிய, கண் ணாளர்தாம் வாழ்வடைக'என்றாள்; அவனுடைய தோளை ஒருதரம் கண்ணாற் சுவைபார்த்தாள். அச்சமயம் குப்பன் அழகியதன் தாய்நாட்டார்