பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 பாரதிதாசன்

பச்சைப் பசுந்தமிழில் பேசுவதைக் கேட்டிருந்தான்். குப்பனது தோளில் குளிர்ந்தமலர் ஒன்றுவிழ இப்பக்கம் பார்த்தான்்; வஞ்சி இளங்கையால் தட்டிய தட்டென்று சந்தேகம் தீர்ந்தவனாய்க் ‘கட்டிக் கரும்பே கவனம் எனக்கு நமது தேசத்தில் நடக்கின்ற பேச்சில் அமைந்து கிடக்கு தென்றான். வஞ்சி அதுகேட்டே அன்னியர்கள் பேசுவதில் அன்பைச் செலுத்துங்கள்: கன்னத்தை மாத்திரம்என் கையிற் கொடுங்களென்றாள். அன்பும் உனக்குத்தான்்; ஆருயிரும் உன்னது தான்் இன்பக் கிளியே! எனக்களிப்பாய் முத்த மென்றான்.

X- ★ ★

கையோடு கைகலந்தார்; முத்தமிடப் போகையிலே ஐயையோ ஐயையோ என்ற அவலமொழி காதிலே வீழ்ந்தது முத்தம் கலைந்ததே! 'ஈதென்ன விந்தை? எழில் வஞ்சி! கேள் என்றான். வஞ்சி கவனித்தாள் சத்தம் வரும்வழியாய்! நெஞ்சைச் செலுத்தினார் நேரிழையும் காதலனும்.

★ ★ 太一 'ஓர்நொடியிற் சஞ்சீவி பர்வதத்தை ஓடிப்போய் வேரோடு பேர்த்துவர வேண்டுமே ஐயாவே? இப்பாழும் வாக்கை இருவரும் கேட்டார்கள். குப்பன் மிகப்பயந்து கோதைமுகம் பார்த்திட்டான். வஞ்சியவள் நகைத்தே இன்ப மணாளரே! சஞ்சீவி பர்வதத்தைத் தாவிப் பெயர்க்கும் மனிதரும் இல்லை! மலையும் அசையா தினிஅந்தச் சத்தத்தில் எண்ணம் செலுத்தாதீர் என்றுரைத்தாள் வஞ்சி. இதுசொல்லித் தீருமுன்.