பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 பாரதிதாசன்

குப்பன் பதைத்தான்் குடல் அறுந்துபோனதுபோல். ‘எப்படித்தாம் நாம் பிழைப்போம்? ஏதும் அறிகிலேன்; சஞ்சீவி பர்வதத்தைத்தாவித்தலையோடு பஞ்சிருக்கும் மூட்டைபோல் பாவி அவன் எவனோ தூக்குகின்றான்! வஞ்சி: சுகித்திருக்க எண்ணினையே! சாக்காடு வந்தடி தக்கவிதம் முன்னமே நம்பென்று நான்சொன்ன வார்த்தையெல்லாம் நம்பாமல் வம்பு புரிந்தாய்? மலையும் அதிர்ந்திடுதே! முத்தம் கொடுத்து முழுநேரமும்தொலைத்தாய்! செத்துமடியும்போது முத்தம் ஒருகேடா? என்றனுயிருக்கே எமனாக வாய்த்தாயே? உன்றன் உயிரைத்தான்் காப்பாற்றிக் கொண்டாயா? தூக்கிவிட்டான்! தூக்கிப்போய் தூளரக ஆக்கிச் சமுத்திரத்தில் அப்படியே போட்டிடுவான்! எவ்வாறு நாம்பிழைப்போம்?ன்டி, இதை நீதான்் செவ்வையாய் யோசித்துச் செப்பாயோ ஓர்மார்க்கம்?

丸 ★ ★

என்று துடிதுடிக்கும் போதில், இளவஞ்சி நின்று நகைத்துத் தன் நேசனைக் கையால் அணைத்தே 'இப்புவிதான்் உண்டாகி எவ்வளவு நாளிருக்கும், அப்போது தொட்டிந்த அந்திநேரம்வரைக்கும் மாமலையைத் தூக்கும் மனிதன் இருந்ததில்லை. ஓமண வாளரே! இன்னம் உரைக்கின்றேன், மன்னுலகம் மறைந்தொழியும் காலமட்டும் பின்னும் மலைதூக்கும் மனிதன் பிறப்பதில்லை. அவ்வாறே ஓர்மனிதன் ஆகாயம் பூமிமட்டும் எவ்வாறு நீண்டு வளருவான்? இல்லை இல்லை; காதல் நிசம். இக் கனிமுத்தம் மிக்க உண்மை! மாதுதோள் உம்தோள் மருவுவது மெய்யாகும்.