பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 பாரதிதாசன்

கொஞ்சநேரத்தில் இலங்கையிலே கொண்டுவந்து

வைத்தார், உடனே மலைமருந்தின் சக்தியால்

செத்த இராமனும் லட்சுமணனும் சேர்ந்ததெழுந்தார்

醬 餐 醬

உற்றிதனைக் கேட்டகுப்பன்' ஓகோ மலையதுதான்் சற்றும் அசையாமல் தான்்துக்கிப் போனானே! ‘லங்கையிலே வைத்தான்ே! லங்கையில்நாம் தப்போமே! என்றான், நடுக்கம் இதயத்தில் நீங்கவில்லை. இன்னும் பொறுங்கள் என உரைத்தாள் வஞ்சி.

景 普播 'பெரும்பாரச் சஞ்சீவி பர்வதத்தைப் பின்னர் இருந்த இடத்தில் அதுமார் எடுத்தேகி

வைத்துவிட்டு வந்தார் மறுநிமிஷம் ஆகாமுன் செத்தார்க் குயிர்கொடுத்தார், தெண்டமும் போட்டு நின்றார்.

爭錄 善 景 குப்பணிது கேட்டுக் குலுக்கென்று தான்் நகைத்தான்் அப்போதே நானினைத்தேன் ஆபத்திரா தென்று, நான்நினைத்த வண்ணம் நடந்ததுதான்் ஆச்சரியம். ஏனடி வஞ்சி: இனியச்சம் இல்லை என்றான்.

. 魯 醫 醫

ஆனாலும் இன்னும் அரைநிமிஷம் காத்திருங்கள்; நானும் அதற்குள்ளே நாதரே, உம்மையொரு சந்தேகம் கேட்கின்றேன், தக்க விடையளிப்பீர்! இந்த மலையில்நாம் ஏறிய பின்நடந்த ஆச்சரிய சம்பவந்தான்் என்ன? அதையுரைப்பீர்! பேச்சை வளர்த்தப் பிரியப் படவில்லை’ என்றாள் இளவஞ்சி, குப்பன் இசைக்கின்றான்:

曇 醬 -蠍