பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைப் பாடல்கள் - 19

'என்னடி வஞ்சி! இதுவும் தெரியாதா? நாமிங்கு வந்தோம், நமக்கோர் நலிவின்றி மாமலையை அவ்அநுமார் தூக்கி வழிநடந்து லங்கையிலே வைத்தது. ராமன் எழுந்ததும், இங்கெடுத்து வந்தே இருப்பிடத்தில் வைத்தது! கண்ணே மலையைக் கடுகளவும் ஆடாமல் கண்ணாடிப் பாத்திரத்தைக் கல்தரையில் வைப்பதுபோல் தந்திரமாய் மண்ணில் தலைகுனிந்து வைத்திட்ட அந்தப் பகுதிதான்் ஆச்சரியம் ஆகுமடி!

骨 督

ஆச்சரிய சம்பவத்தைக் குப்பன் அறிவித்தான்். பேச்செடுத்தாள் வஞ்சி; பிறகும் ஒரு சத்தம்:

曾 骨 'இம்மட்டும் இன்று கதையை நிறுத்துகின்றேன்; செம்மையாய் நாளைக்குச் செப்புகின்றேன் மற்றவற்றைச் சத்தியரா மாயணத்திற் சத்தான் இப்பகுதி உத்தியாய்க் கேட்டோர் உரைத்தோர் எல்லாருமே இங்குள்ள போகங்கள் எல்லாம் அனுபவிப்பார்; அங்குள்ள வைகுந்தம் அட்டியின்றிச் சேர்வார்கள்; ஜானகீகாந்தஸ் மரணே ஜயஜயராம்!

骨 骨 骨

"மானோ தென்னஎன்றான் வையம் அறியாக்குப்பன். 'முன்புநான் உங்களுக்கு முத்தம் கொடுக்கையிலே சொன்ன ஐயையோ தொடங்கி இதுவரைக்கும் ராமாயணம் சொல்லி நாளைக் கழிக்கின்ற ஏமாந்தார் காசுக் கெசமானன் என்றுரைக்கும் பாகவதன் சொன்னான் பலபேரைக் கூட்டியே.