பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 - பாரதிதாசன்

ஆகியதும் இந்த அரிய உழைப்புக்குப் பத்தோ பதினைந்தோ பாகவதன் பெற்றிடுவான். சித்த மலைக்கச் சிறிதுமிதில் இல்லை யென்று கையிலிருந்தஒரு காட்சிதரும் மூலிகையை 'ஐயா இதைவிழுங்கி அவ்இடத்திற் பாருங்கள் என்றந்தக் குப்பனிடம் ஈந்துதான்ும்தின்றாள். தின்றதும் தங்கள் விழியால் தெருவொன்றில் 'மாளிகையி னுள்ளே மனிதர் கூட்டத்தையும், ஆளிவாய்ப்பாகவதன் அங்கு நடுவிலே உட்கார்ந் திருப்பதையும், ஊர்மக்கள் செல்வதையும் பட்டைநாமக்காரப் பாகவதன் ரூபாயைத் தட்டிப்பார்க் கின்றதையும், சந்தோஷம் கொள்வதையும் கண்டார்கள். கண்டு கடகடவென்றேசிரித்தார். வண்டு விழியுடைய வஞ்சியுரைக்கின்றாள்:

骨 骨 贊

வானளவும் அங்கங்கள், வானரங்கள், ராமர்கள், ஆனது செய்யும் அநுமார்கள், சாம்பவந்தர், ஒன்றல்ல, ஆயிரம் நூல்கள் உரைக்கட்டும். விஸ்வரூபப்பெருமை, மேலேறும் வன்மைகள், உஸ்என்ற சத்தங்கள், அஸ்என்ற சத்தங்கள் எவ்வளவோ நூலில் எழுதிக் கிடக்கட்டும்: செவ்வைக் கிருபை செழுங்கருணை அஞ்சலிக்கை முத்தி முழுச்சுவர்க்கம் முற்றும் உரைக்கட்டும். இத்தனையும் சேரட்டும் என்ன பயனுண்டாம்? உள்ள பகுத்தறிவுக் கொவ்வாத ஏடுகளால் எள்ளை அசைக்க இயலாது மானிடர்கள் ஆக்குவதை ஆகாதழிக்குமோ? போக்குவதைத் தேக்குமோ? சித்தம் சலியாதத் திறன்வேண்டும் மக்கள் உழைப்பில் மலையாத நம்பிக்கை