பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைப் பாடல்கள் 21

எக்களிக்க வேண்டும் இதயத்தில்: ஈதன்றி நல்லறிவை நாளும் உயர்த்தி உயர்த்தியே புல்லறிவைப் போக்கிப் புதுநிலைதேடல்வேண்டும். மக்கள் உழைக்காமுன் மேலிருந்து வந்திடுமோ? எக்காரணத்தாலும் இன்மையிலே உண்மையுண்டோ? மீளாதா மூடப் பழக்கங்கள் மீண்டும்உமை நாடா திருப்பதற்கு நானுங்களைஇன்று சஞ்சீவி பர்வதத்தில் கூப்பிட்டேன் தற்செயலாய் அஞ்சும் நிலைமையே அங்கே நிகழ்ந்ததுண்டாம். உங்கள் மனத்தில் உறைந்து கிடந்திட்ட பங்கஞ்செய் மூடப் பழக்க வழக்கங்கள் இங்கினிமேல் நில்லா எனநான் நினைக்கின்றேன். தங்கள்கை நீட்டித்தமியாளை முன்னரே சாரலிலே முத்தம் தரக்கேட்டீர், சாயவில்லை. ஈர மலையிலே யான்தந்தேன், ஏற்கவில்லை. சத்தத்தை எண்ணிச் சலித்தீர்அச்சத்தத்தால் முத்தத்தை மாற்ற முடியாமற் போனாலும் உம்மைப் பயங்காட்டி ஊளையிட்ட சத்தத்தால் செம்மைமுத்தம் கொள்ளவில்லை சேர்த்துமுத்தம் கொள்வீரே!

骨 骨 + ஏஏ நான் இன்றைக்கு ஏளனத்துக் காளானேன். நீயேன் இதையெல்லாம் நிச்சயமாய்ச்சொல்லவில்லை? ராமாயணமென்ற நலிவுதருங்கதை - பூமியிலிருப்பதைஇப்போதே அறிகின்றேன். நம்பத் தகாதவெலாம்நம்பவைத்துத் தாங்கள் நலம் சம்பாதிக் கின்ற சரித்திரக் காரர்களால் நாடு நலிகுவதை நான் இன்று கண்டுணர்ந்தேன். தோடு புனைந்த சுடர்க்கொடியே நன்று சொன்னாய்! நல்ல இமயம் நலங்கொழிக்கும் கங்கைநதி.