பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 பாரதிதாசன்

வெல்லத் தமிழ்நாட்டின் மேன்மைப் பொதியமலை, செந்நெல் வயல்கள், செழுங்கரும்புத் தோட்டங்கள். தின்னக் கனிகள், தெவிட்டாப் பயன்மரங்கள், இன்பம் செறிந்திருக்கும் இப்பெரிய தேசத்தில் முப்பது முக்கோடி மாந்தர்கள் மொய்த்தென்ன? செப்பும் இயற்கை வளங்கள் செறிந்தென்ன? மூடப் பழக்கம், முடிவுற்ற கண்ணுறக்கம் 400 ஓடுவதென்றோ? உயர்வதென்றோ? நானறியேன். பாரடி மேற்றிசையில் சூரியன் பாய்கின்றான். சார்ந்த ஒளிதான்் தகத்தகா யக்காட்சி! மாலைப் பொழுதும் வடிவழகு காட்டுதுபார்! சாலையிலோர் அன்னத்தைத் தன்பேடு தேடுதுபார். என்னடி சொல்கின்றாய் ஏடி இளவஞ்சி? என்நெஞ்சை உன்நெஞ்சம் ஆக்கிப்பார் என்றுரைத்தான்்.

醬 督 骨 தென்றலிலே மெல்லச் சிலிர்க்கும் மலர்போல கன்னி யுடல்சிலிர்க்கக் காதலரே நாம் விரைவாய்ச் சாரல் அடைவோமே, காதலுக்குத்தக்கஇடம், சாரலும் தண்மாலை நாயகியைச் சாரக், குயில்கூவிக் கொண்டிருக்கும்; கோலமிகுந்த மயிலாடிக் கொண்டிருக்கும்; வாச முடையநற் காற்றுக் குளிர்ந்தடிக்கும்; கண்ணாடி போன்றநீர் ஊற்றுக்கள் உண்டு; கனிமரங்கள் மிக்க உண்டு, பூக்கள் மணங்கமழும், பூக்கள்தொறும் சென்றுதேன் ஈக்கள் இருந்தபடி இன்னிசைபாடிக்களிக்கும், அன்பு மிகுந்தே அழகிருக்கும் நாயகரே இன்பமும் நாமும் இனி! 1936

Ο Ο Ο