பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 பாரதிதாசன்

குலமகளை அன்னவன்பால் கற்க விட்டால்

குறைவந்து சேர்ந்தாலும் சேர்தல் கூடும்!

ஆனாலும் நாணிதற்கோர் மார்க்கம் சொல்வேன்:

அமுத வல்லி உதாரனிடம் கற்கும்போது தேனிதழாள்தனை அவனும், அவனைப் பெண்ணும் தெரிந்துகொள்ள முடியாமல் திரை விடுக்க! பானல்விழி மங்கையிடம் உதார னுக்குப்

பார்வையில்லை குருட னென்று சொல்லிவைக்க! ஞானமுறும் உதாரனிடம் 'அமுத வல்லி

நலிகுஷ்டரோகி என எச்சரிக்க!

தார்வேந்தன் இதுகேட்டான்; வியந்தான்்! ஆம் ஆம்

தந்திரத்தால் ஆகாத தொன்று மில்லை; பேர்வாய்ந்த உதாரனைப்போய் அழைப்பீர் என்றான்.

பேச்சுவல்ல அமைச்சர்பலர் சென்றழைத்தார். தேர்வாய்ந்த புவிராஜன் போலே அந்தச்

செந்தமிழ்த் தீங்கவிராஜன் உதாரன் வந்தான்் பார்வேந்தன் நிகழ்த்தினான்; உதாரன் கேட்டுப்

'பைந்தமிழ்க்குத் தொண்டுசெயக் கடவோம் என்றான்.

மன்னவன் ஆணைப்படி-கன்னி மாடத்தைச் சேர்ந்ததொரு பன்னரும் பூஞ்சோலை-நடுப் பாங்கில் ஓர் பொன்மேடை! அன்னதோர் மேடையிலே-திரை ஆர்ந்த மறைவினிலே மின்னொளி கேட்டிருப்பாள்-கவி வேந்தன் உரைத்திடுவான்!

யாப்புமுறை உரைப்பான்-அணி யாவும் உரைத்திடுவான்;