பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைப் பாடல்கள் 25

பாப் புனை தற்கான-அது பவம்பல புகல்வான். தீர்ப்புற அன்னவளும்-ஆக சித்திரம் நன்மதுரம், - சேர்ப்புறு வித்தாரம்-எனும் தீங்கவிதை அனைத்தும்,

கற்றுவர லானாள்-அது கால பரியந்தம் சற்றும் அவன் முகத்தை-அவள் சந்திக்கவில்லை! விழி அற்றவனைப் பார்த்தல்-ஓர் அபசகுன மென்றோ? உற்றதோர் நோயுட்ையாள்-என்று உதாரனும் பார்த்ததில்லை.

இவ்விதம் நாட்கள் பலப்-பல ஏகிட ஓர் தினத்தில் செவ்விழிவேலுடையாள்-அந்த மேடையிற் காத்திருந்தாள். அவ்வமயந்தனிலே-விண் அத்தனையும் ஒளியால் கவ்வி உயர்ந்தது.பார்-இருட் காட்டை அழித்த நிலா!

அமுதவல்லி காத்திருந்த மேடையண்டை

அழகியபூஞ்சோலையண்டை உதாரன் நின்றே,

இமையாது நோக்கினான் முழுநிலாவை!

இருவிழியால் தழுவினான்; மனத்தால் உண்டான்!