பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 பாரதிதாசன்

என்ன வியப்புது? வானிலே-இருந் திட்டதோர் மாமதி மங்கையாய் என்னெதிரே வந்து வாய்த்ததோ?-புவிக் கேதிது போலொரு தண்ஒளி!

மின்னற் குலத்தில் விளைந்ததோ?-வான் வில்லின் குலத்திற் பிறந்ததோ? கன்னற் தமிழ்க்கவி வாணரின்-உளக் கற்பனையே உருப்பெற்றதோ? பொன்னின் உருக்கிற் பொலிந்ததோ?-ஒரு பூங்கொடியோ? மலர்க் கூட்டமோ? என்று நினைத்த உதாரன்தான்்-நீ யார்? என்ற ஓர் உரை போக்கினான்.

'அமுதவல்லியன்றோ!' என்றாள் - அந்த அமைச்சனும் முடிவேந்தனும் நமைப் பிரித்திடும் எண்ணத்தால்-உனை நாட்டம் இலாதவன், என்றனர்! சமுசயப்பட நீ இன்று-மதி தரிசன மதைப் பாடினை! * { கமலங்கள் எனும் கண்ணுடன்- உனைக் காணப் பெற்றதென் கண் என்றாள்.

'இன்னொன்று கேளாயோ அமுதவல்லி?

என்னிடத்தில் உன்தந்தை' என் மகட்கு முன்னொன்று தீவினையால் பெருநோய் வந்து

மூண்டதெனச் சொல்லி வைத்தான்்! அதனாலன்றோ, மின்ஒன்று பெண்ணென்று புவியில் வந்து

விளைந்தது போல் விளைந்தஉனதழகுமேனி இன்றுவரை நான்பார்க்க எண்ணவில்லை

என்றுரைத்தான்், வியப்புடையான் இன்னுஞ் சொல்வான்;