பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 பாரதிதாசன்

சாதிஉயர் வென்றும், தனத்தால் உயர்வென்றும், போதாக் குறைக்குப் பொதுத்தொழிலாளர்சமூகம்

மெத்த இழிவென்றும், மிகுபெரும்பாலோரைஎல்லாம் கத்தி முனைகாட்டிக் காலமெல்லாம் ஏய்த்துவரும் பாவிகளைத்திருத்தப் பாவலனே நம்மிருவர் ஆவிகளையேனும் அர்ப்பணம்செய்வோம்.இதனை நெஞ்சார உன்மேலே நேரிழையாள் கொண்டுள்ள மிஞ்சுகின்ற காதலின்மேல் ஆணையிட்டு விள்ளுகின்றேன்! இன்னும்என்ன? என்றாள். உதாரன் விரைந்தோடி அன்னத்த்ை தூக்கியே ஆரத் தழுவினான்.

இன்ப உலகில் இருவர்களும் நாள்கழித்த்ார். பின்பொருநாள் அந்தப் பெருமாட்டி அங்கமெல்லாம்

மாறுபடக் கண்டு மனம் பதறித் தோழியர்கள் வேறு வழியின்றிவேந்தனிடம் ஓடியே 'மன்னவனே! உன் அருமை மங்கை அமுதவல்லி தன்னை உதாரனுக்குத் தத்தம் புரிந்தாளோ?, காதல்எனும் இன்பக் கடலில் குளித்துவிட்ட மாதிரியாய்த் தோன்றுகிறாள், மற்றிதனை மேன்மைச்

சமூகத்தில் விண்ணப்பம் சாதித்தோம் என்றார். அமைதியுடைய அரசன் அதன் உண்மை கண்டறிய வேண்டுமென்று கன்னிகைமாடத்தருகே அண்டியிருந்தான்்.இரவில் ஆரும் அறியாமல்:

வந்த உதாரன்எழில் மங்கைக்கு கைலாகு