பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைப் பாடல்கள்

t

தந்து, தமிழில் தனிக்காதலைக் கலந்து பேசினதும், காத்திருந்த பெண்ணரசி வேல்விழியை வீசினதும், முத்தம் விளைத்த நடைமுறையும் கண்டான் அரசன்! கடுகடுத்தான்்! ஆயிரந்தேள் மண்டையிலே மாட்டியது போல மனமுளைந்து

மாளிகைக்குச் சென்றான், மறுநாள் விடியலிலே வாளில் விஷம்பூசி வைத்திருக்கச் சொல்லிவிட்டுச்

சேவகரைச் சீக்கிரம் உதாரனை இழுத்துவர ஏவினான், அவ்வாறிழுத்துவந்தார் வேந்தனிடம்.

இச்சேதி ஊரில் எவரும் அறிந்தார்கள்; அச்சமயம் எல்லாரும் அங்குவந்து கூடிவிட்டார்.

ஆர்ந்த கவியின் அரசனுயிர் இன்றோடு தீர்ந்ததோ என்று திடுக்கிட்டார் எல்லாரும்:

ஈடற்ற நற்கவிஞன் இந்நிலைமை, அக்கன்னி மாடத்தில் உள்ளனழில் மங்கைக்கும் எட்டியதாம்.

அங்கே உதாரனிடம் மன்னன் உரைக்கின்றான் சிங்காதனத்திலே சேர்ந்து:

"கொற்றவன் பெற்ற குலக்கொடியைக் கவி கற்க உன்பால் விடுத்தேன்-அட!

"குற்றம் புரிந்தனையா இல்லையா இதை

மட்டும் உரைத்துவிடு!!

வெற்றி எட்டுத்திக்கு முற்றிலுமே சென்று

மேவிட ஆள்பவன் நான்-அட