பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 பாரதிதாசன்

இற்றைக்கு நின்தலை அற்றது! மற்றென்னை

என்னென்றுதா னினைத்தாய்?

வாள்பிடித்த புவி ஆளுமிராசர் என் தாள்பிடித்தே கிடப்பார்!-அட!

ஆள்பிடித்தால் பிடி ஒன்றிருப்பாய் என்ன

ஆணவமோ உனக்கு?

மீள்வதற்கோ இந்தத் தீமை புரிந்தனை

வெல்லத் தகுந்தவனோ?-இல்லை!

மாள்வதற்கே இன்று மாள்வதற்கே என்று

மன்னன் உரைத்திடவே,

உதாரன் மறுமொழி:

'மாமயில் கண்டு மகிழ்ந்தாடும் முகில்

வார்க்கும் மழைநாடா!-குற்றம் ஆம்என்று நீயுரைத் தால்குற்றமே குற்றம்

அன்றெனில் அவ்விதமே! கோமகள் என்னைக் குறையிரந்தாள்; அவள்

கொள்ளை வனப்பிலே-எனைக் காமனும் தள்ளிடக் காலிடறிற்றுக்,

கவிழந்த வண்ணம் வீழ்ந்தேன்!

பழகும் இருட்டினில் நானிருந்தேன்; எதிர் பால்நில வாயிரம்போல்-அவள் அழகு வெளிச்சம் அடித்த தென்மேல்

அடியேன் செய்த தொன்று மில்லை. பிழைபுரிந்தேனென்று தண்டனை போடுமுன்

பெற்று வளர்த்த-உன்றன் இழைபுரிச் சிற்றிடை அமுதவல்லிக்குள்ள

இன்னல் மறப்பதுண்டோ?