பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைப் பாடல்கள் 35

கவிஞன் இவ்வாறுரைத்தான்்-புவி காப்பவன் இடியெனக் கனன்று ரைப்பான்; 'குவிந்த உன் உடற்சதையைப்-பல கூறிட்டுநரிதின்னக் கொடுத்திடுவேன். தவந்தனில் ஈன்ற என்பெண்-மனம் தாங்குவதில்லையெனிற் கவலை இல்லை! நவிலுமுன் பெரும் பிழைக்கே-தக்க ராசதண்டனை யுண்டு மாற்ற முண்டோ?

அரசனின் புதல்வி அவள்-எனில் அயலவனிடம் மனம் அடைதலுண்டோ? சரச நிலையிலிருந்தீர்-அந்தத் தையலும் நீயும், அத் தருணமதில் இருவிழி யாற் பார்த்தேன்!-அறி விலி, உனதொரு குடி அடியோடே விரைவில் என் ஆட்சியிலே-ஒரு வேர்இன்றிப் பெயர்த்திட விதித்துவிட்டேன்!

'கொலைஞர்கள் வருக என்றான்-அவன் கூப்பிடு முன் வந்து கூடிவிட்டார். 'சிலையிடை இவனை வைத்தே-சிரச் சேதம் புரிக' எனச் செப்பிடு முனம், மலையினைப் பிளந்திடும் ஓர்-சத்தம் வந்தது! வந்தனள் அமுதவல்லி! 'இலை உனக் கதிகாரம்-அந்த எழிலுடையான் பிழை இழைக்கவில்லை.

ஒருவனும் ஒருத்தியுமாய்-மனம் உவந்திடில் பிழையென உரைப்பதுண்டோ?