பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைப் பாடல்கள் - 41

சிரம் அறுத்தல் வேந்தனுக்குப் பொழுது போக்கும்

சிறியகதை நமக்கெல்லாம் உயிரின் வாதை

அரசன்மகள் தன்நாளில் குடிகட் கெல்லாம்

ஆளுரிமை பொதுவாக்க நினைத்திருந்தாள்!

ஐயகோ சாகின்றாள்! அவளைக் காப்பீர்!

அழகியனன் திருநாடே! அன்பு நாடே! வையகத்தில் உன்பெருமை தன்னை, நல்ல

மணிநதியை, உயர்குன்றைத், தேனை அள்ளிப் பெய்யுநூறுஞ் சோலையினைத், தமிழாற் பாடும் பேராவல் தீர்ந்ததில்லை! அப்பே ராவல் மெய்இதயம் அறுபடவும், அவ்இரத்த

வெள்ளந்தான்் வெளிப்படவும் தீரு மன்றோ?

வாழியஎன் நன்னாடு பொன்னாடாக!

வாழியநற் பெருமக்கள் உரிமை வாய்ந்தே வீழியபோய் மண்ணிடையே வீண்வீழ் கொள்ளி

வீழ்வதுபோல் தனித்தாளும் கொடிய ஆட்சி! ஏழையினேன் கடைசிமுறை வணக்கம் செய்தேன்! என்பெரியீர், அன்னையிர் ஏகுகின்றேன்! ஆழ்கஎன்றன் குருதியெலாம் அன்பு நாட்டில்

ஆழ்க என்றான்! தலைகுனிந்தான்் கத்தியின் கீழ்!

படிகத்தைப் பாலாபிஷேகம் செய்து

பார்ப்பதுபோல் அமுதவல்லி கண்ணி வெள்ளம் அடிசோர்தல் கண்டார்கள், அங்கி ருந்தோர்!

ஆவென்று கதறினாள் அன்பு செய்தோர் படிமீது வாழாரோ? என்று சொல்லிப்

பதைபதைத்தாள் இதுகேட்டதேச மக்கள், கொடிதென்றார்! கொடுவாளைப் பறித்தார்; அந்தக்

கொலையாளர் உயிர்தப்ப ஓட லானார்!