பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரத்தாய்

காட்சி - 1 (மணிப்புரி மாளிகையில் ஓர் தனி இடம். சேனாதிபதி காங்கேயனும் மந்திரியும் பேசுகின்றனர்.)

சேனாதிபதி :

மன்னன் மதுவினில் ஆழ்ந்து கிடக்கின்றான்! மின்னல்நேர் சிற்றிடை ராணி விஜயா நமக்கும் தெரியாமல் எவ்விடமோ சென்றாள், அமைப்புறும் இந்த மணிபுரி ஆட்சி எனக்கன்றோ! அன்றியும் என்னரும் நண்பா உனக்கே அமைச்சுப் பதவி உதவுவேன்!

மந்திரி :

ஒன்றுகேள்சேனைத் தலைவ! பகைப்புலம் இன்றில்லை; ஆயினும் நாளை முளைக்கும் அரசியோ வீரம், உறுதி அமைந்தாள் தரையினர் மெச்சும் சர்வ கலையினள்!

சேனாபதி:

அஞ்சுதல் வேண்டாம் அவளொரு பெண்தான்ே!

மந்திரி :

நெஞ்சில்நான் பெண்ணை எளிதாய் நினைக்கிலேன்.