பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 பாரதிதாசன்

சேனாதிபதி :

ஆடை, அணிகலன் ஆசைக்கு வாசமலர் தேடுவதும், ஆடவர்க்குச் சேவித் திருப்பதுவும். அஞ்சுவதும் நாணுவதும் ஆமையைப்போல் வாழுவதும் கொஞ்சுவது மாசுக் கிடக்கும் மகளிர்குலம் மானிடர் கூட்டத்தில் வலியற்ற ஓர் பகுதி! ஆனமற்றோர்பகுதி ஆண்மை எனப்புகல்வேன்! எவ்வாறானாலும்கேள்! சேனையெலாம் என்னிடத்தில்: செய்வார்யார் நம்மிடத்தில் சேட்டை? இதை யோசி!

மந்திரி :

(சிரித்துச் சொல்வான்) மானுஷியம் மேல் என்பார், வன்மையுடைய தென்பார் ஆன அதனை அளித்ததெது? மீனக் கடைக்கண்ணால் இந்தக் கடலுலகம் தன்னை நடக்கும்வகை செய்தெது? நல்லதொரு சக்தி வடிவமெது? மாமகளிர் கூட்டமன்றோ? உன்சொற் கொடிது! குறையுடைத்து! மேலும் அதுகிடக்க, மன்னன் இளமைந்தன் எட்டு வயதுடையான், இன்னும் சிலநாளில் ஆட்சி எனக்கென்பான்!

சேனாபதி :

கல்வியின்றி யாதோர் கலையின்றி, வாழ்வளிக்கும் நல்லொழக்க மின்றியே நானவனை ஊர்ப்புறத்தில் வைத்துளேன். அன்னோன் நடைப்பிணம்போல் வாழ்கின்றான். இத்தனைநாள் இந்த ரகசியம் நீயறியாய்!

மந்திரி : ஆமாம் கல்வியிலான் ஆவி யிலாதவனே!