பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைப் பாடல்கள் 45

சாமர்திய சாலி தந்திரத்தில் தேர்ந்தவன் நீ! உன் எண்ணம் என்னசொல்? நான் உனக்கொத்திருப்பேன்! முன்னால் செயப்போவ தென்ன மொழிந்துவிடு!

சேனாதிபதி :

ராசாங்க பொக்கிஷத்தை நாம்திறக்க வேண்டும்; பின் தேசத்தின் மன்னனெனச் சீர்மகுடம் நான்புனைந்தே ஆட்சிசெய வேண்டாமோ, ஆசையிது காலத்தை நீட்சிசெய வேண்டாம்; விரைவில் நிகழ்விப்பாய்!

மந்திரி :

பொக்கிஷத்தை யார் திறப்பார்? பூட்டின் அமைப்பை அதன் மிக்க வலிமைதனைக் கண்டோர் வியக்கின்றார், தண்டோராப் போட்டுச் சகலர்க்கும்சொல்லிடுவோம் அண்டிவந்து தாம்திறப்பார்க் காயிரரூ பாய்கொடுப்போம்.

சேனாதிபதி:

தேவிலை:நீ சொன்னதுபோல் செய்துவிடு சீக்கிரத்தில் ஆவி அடைந்தபயன் ஆட்சிநான் கொள்வதப்பா?

காட்சி - 2

(சேனாதிபதி அரச குமாரனாகிய சுதர்மனை மூடனாக்கி வைக்கக் கருதிக் காடு சேர்ந்த ஓர் சிற்றுாரில் கல்வியில்லாத காளிமுத்து வசத்தில் விட்டு வைத்திருக்கிறான். கிழவர் ஒருவர் காளிமுத்தை நண்பனாக்கிக் கொண்டு உடன் வசிக்கிறார்.)