பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 பாரதிதாசன்

காளிழுத்து :

என்னாகெழவா? பொடியனெங்கே இங்கேவா! கன்னாபின்னாஇன்னு கத்துறியே என்னாது? மாடுவுளை மேய்க்கவுடு மாந்தோப்பில் ஆடவுடு காடுவுளே சுத்தவுடு கல்விசொல்லித்தாராதே!

கிழவர் : மாட்டினொடும் ஆட்டினொடும் மன்னன் குமாரனையும் கூட்டிப்போய் வந்திடுவேன்; குற்றமொன்றும் நான்புரியேன்! மன்னன், மகனுக்குக் கல்வியோ நல்லறிவோ ஒன்றும் வாரமே உன் உத்தரவு போல்நடப்பேன்.

காளிமுத்து : ஆனாநீபோய்வா, அழைச்சிப்போ பையனையும் ஓநாயில் லாதஇடம் ஒட்டு!

காட்சி - 3

(கிழவர் ஓர் தனியிடத்தில் சுதர்ம னுக்கு வில்வித்தை கற்றுக் கொடுக்கிறார்). -

கிழவர் :

விற்கோலை இடதுகரத்தால் தூக்கி, நாணை விரைந்தேற்றித், தெறித்துப்பார் தூரத்தில் பற்பலவாம் சரங்களிலே ஒன்றை வாங்கிப் பழுதின்றிக் குறிபார்த்து, லட்சியத்தைப் பற்றிவிடு மற்றொன்று, மேலும் ஒன்று