பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைப் பாடல்கள் 47

படபடனெச்சரமாரி பொழி!சு தர்மா, - நிற்கையில் நீ நிமிர்ந்து நிற்பாய் குன்றத்தைப்போல்: நெளியாதே லாவகத்தில் தேர்ச்சி கொள் நீ!

சுதர்மன் :

கற்போர்கள் வியக்கும்வகை இந்நாள் மட்டும் கதியற்றுக் கிடந்திட்ட அடியே னுக்கு மற்போரும், விற்போரும், வாளின் போரும், வளர்கலைகள் பலப்பலவும் சொல்லித் தந்தீர்! நற்போத காசிரியப் பெரியீர், இங்கு நானுமக்குச் செயும்கைமா றொன்றும் காணேன்! அற்புதமாம்! தங்களை நான் இன்னாரென்றே அறிந்ததில்லை; நீரும் அதை விளக்க வில்லை.

கிழவர் :

இன்னாரென்றென்னைநீ அறிந்து கொள்ள இச்சையுற வேண்டாங்காண் சுதர்மா, என்னைப் பின்னாளில் அறிந்திடுவாய்! நீறு பூத்த பெருங்கனல்போல் பொறுத்திருப்பாய்; உன் பகைவன் என்பகைவன்! உன்னாசை என்றன் ஆசை! இஃதொன்றே நானுனக்குச் சொல்லும் வார்த்தை! மின்னாத வானம் இனி மின்னும் அன்பு வெறிகாட்டத்தக்கநாள் தூர மில்லை!

காட்சி - 4

(சுதர்மனும் கிழவரும் இருக்கு

மிடத்தில் தண்டோராச் சத்தம்

கேட்கிறது) -