பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைப் பாடல்கள் 49

வேலையிலே அமைத்துவிடு ராசாங்கத்தில்! சேனாபதி :

உள்ளது நீ சொன்னபடி செய்க (கிழவரை நோக்கி) ஐயா, ஊர்தோறும் அலையாதீர்! இங்கிருப்பீர்!

கிழவர் :

அரண்மனையில் எவ்விடத்தும் சஞ்சரிக்க அனுமதிப்பீர்! என்னால்இவ் வரசாங்கத்தில் விரைவில் பல ரகசியங்கள் வெளியாம்! என்று விளங்குகின்ற தென்கருத்தில் சொல்லி விட்டேன்.

சேனாபதி :

பெரியாரே, அவ்வாறே! அட்டியில்லை.

மந்திரி : பேதமில்லை, இன்றுமுதல் நீருமிந்த அரசபிரதான்ியரில் ஒருவர் ஆனி. அறிவுபெற்ற படியாலே எல்லாம் பெற்றீர்!

காட்சி - 6

(சேனாபதி காங்கேயன், தான்ே மணிபுரி அரசனென்று நாளைக்கு மகுடாபிஷேகம் செய்துகொள்ளப்

போகிறான். வெளிநாட்டரசர்களும் வருகின்ற நேரம். மந்திரி நாட்டின் நிலைமையைச் சேனாபதிக்குத் தெரிவிக்கிறான்.)

4