பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைப் பாடல்கள் 51

காட்சி - 7

(அயல்நாட்டு வேந்தர்கள் வந்தார்கள்; சேனாபதி அவர்களை வர வேற்றுத் தனது மகுடாபிஷேகத்தை ஆதரிக்க வேண்டுகிறான்.)

சேனாபதி :

மணிபுரியின் வேந்தனார் மதுவை யுண்டு மனங்கெட்டுப் போய்விட்டார். விஜய ராணி தணியாத காமத்தால் வெளியே சென்றாள். தனியிருந்த இளங்கோமான் சுதர்மன் என்பான் அணியாத அணியில்லை! அமுதே உண்பான்! அருமையுடன் வளர்த்துவந்தும் கல்வியில்லை. பிணிபோல அன்னவன்பால் தீயொழுக்கம் பெருகினதால் நாட்டினரும் அமைச்சர் யாரும்

என்னைமுடிசூடுகென்றார். உங்கட்கெல்லாம் ஏடெழுதினேன்நீரும் விஜயம் செய்தீர்; சென்னியினால் வணங்குகின்றேன். மகுடம் பூணச் செய்தென்னை ஆதரிக்கவேண்டுகின்றேன். மன்னாதி மன்னர்களே, என் விண் ணப்பம்! மணிமுடியை நான் புனைந்தால் உம்மை மீறேன்; எந்நாளும் செய்நன்றி மறவேன் கண்டீர்! என்னாட்சி நல்லாட்சி யாயிருக்கும்!

வெள்ளிநாட்டு வேந்தன் : (கோபத்தோடு கூறுகிறான்)

காங்கேய சேனாதி பதியே நீர்ஒர் கதைசொல்லி முடித்துவிட்டீர்; யாமும் கேட்டோம்.