பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 பாரதிதாசன்

(கிழவர் காணப்படாததறிந்து மந்திரி வருந்துவான்).

திருவிலார் இவர்என்றெண்ணித் தீங்கினைஎண்ணி அந்தப் பெரியாரும் நம்மைவிட்டுப் பிரிந்தனர் போலும் நண்பா அரிவையர் கூட்டமெல்லாம் அறிவிலாக் கூட்டம் என்பாய்! புரிவரோ விஜயராணி புருந்தஇச் செயல்கள் மற்றோர்!

சேனாபதி :

இன்னலெலாம் நேர்க! இனியஞ்சப் போவதில்லை. மன்னன் மகனைப் பார்ப்போம் வா! .

காட்சி - 9

(கிழவர் சுதர்மனுக்கு வாட்போர் கற்பிக்கிறார். இதனை ஒருபுற மிருந்து சேனாபதியும் மந்திரியும் கவனிக்கிறார்கள்.)

சேனாபதி :

தாழ்திறந்த அக்கிழவன் ராச தனயனுக்குப் பாழ்திறந்து நெஞ்சத்தில் பல்களையும் சேர்க்கின்றான். வஞ்சக் கிழவனிவன் என்னருமை வாழ்க்கையிலே நஞ்சைக் கலப்பதற்கு நம்மை அன்று நண்ணினான். வாளேந்திப் போர்செய்யும் மார்க்கத்தைக் காட்டுகின்றான். தோளின் துரிதத்தைக் கண்டாயோ என்நண்பா!

(சேனாபதி கோபத்தோடு சுதர் மனை அணுகிக் கூறுவான்.)