பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 பாரதிதாசன்

காத்துக்கொள்ள முடியாமலும் சாகத் துணியாமலும் புறங்காட்டி ஓடுகிறான். கிழவரும் சுதர்மனும் சபையை நோக்கி ஓடும் சேனா பதியைத் துரத்திக்கொண்டு معاوي வருகிறார்கள்.)

காட்சி - 10

(கூடியுள்ள அயல்நாட்டு வேந்தர் களிடம் சேனாபதி ஓடிவந்து சேர்ந்தான்், அவனைத் தொடர்ந்து கிழவரும், சுதர்மனும் உருவிய கத்தியுடன் வந்து சேர்கிறார்கள்.)

வெள்ளிநாட்டு வேந்தன்:

ஆடுகின்ற நெஞ்சும் அழுங்கண்ணு மாக நீ ஒடிவரக் காரணமென் உற்ற சபைநடுவில்? சேனாபதியே, தெரிவிப்பாய் நன்றாக?

(சேனாபதி ஒருபுறம் உட்கார்தல்)

மானைத் துரத்தி வந்த வாளரிபோல் வந்து

குறித்தெடுத்துப் பார்க்கின்றீர், நீவிர்யார் கூறும்?

(என்று பெரியவரை நோக்கிக்

கூறிப்பின் அயல்நின்ற சுதர்மனை நோக்கிக் கூறுவான்.)