பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைப் பாடல்கள் 57

பறித்தெடுத்த தாமரைப்பூம் பார்வையிலே வீரம் பெருக்கெடுக்க நிற்கின்றாய் பிள்ளையே நீயார்?

கிழவர் :

இருக்கின்ற வேந்தர்களே, என்வார்த்தை கேட்டிடுவீர்! மன்னர் குடிக்கும் வழக்கத்தைச் செய்துவைத்தும், என்னை வசப்படுத்த ஏற்பாடு செய்வித்தும் செல்வனையும் தன்னிடத்தேசேர்த்துப் பழிவாங்கக் கல்வி தராமல் கடுங்காட்டில் சேர்ப்பித்தும் பட்டாபிஷேகமனப் பால்குடித்தான்் காங்கேயன்! தொட்டவாள் துண்டித்தேன் தோள்திருப்பி இங்கவந்தான்்!

(தான்் கட்டியிருந்த பொய்த்தாடி முதலியவைகளைக் களைகிறாள். கிழவராய் நடித்த விஜயராணி.)

தாடியும்பொய்! என்றன் தலைப்பாகையும் பொய்யே! கூடியுள்ள அங்கியும்பொய்! கொண்ட முதுமையும்பொய்! 'நான்விஜய ராணி! நகைக்கப் புவியினிலே ஊனெடுத்த காங்கேயன் ஒன்றும் உணர்கிலான்! கோழியும்தன் குஞ்சுதனைக் கொல்லவரும் வான்பருந்தைச் சூழ்ந்தெதிர்க்க அஞ்சாத தொல்புவியில், ஆடவரைப் பெற்றெடுத்த தாய்க்குலத்தைப் பெண்குலத்தைத் துஷ்டருக்குப் புற்றெடுத்த நச்சரவைப் புல்லெனவே எண்ணிவிட்டான்'

வெள்ளி நாட்டரசன் :

(ஆச்சரியத்தோடு கூறுவான்.)