பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 பாரதிதாசன்

நீரன்றோ அன்னையார் நீரன்றோ வீரியார் ஆர்எதிர்ப்பார் அன்னையார் அன்பு வெறிதன்னை!

வள்ளிநாட்டு மகிபன் :

ஆவி சுமந்துபெற்ற அன்பன்உயிர் காப்பதற்குக் கோவிந்த தாயினெதிர், கொல்படைதான்் என்செய்யும்?

கொன்றைநாட்டுக் கோமான் :

அன்னையும் ஆசானும் ஆருயிரைக் காப்பானும் என்னும் படிஅமைந்தீர்! இப்படியே பெண்ணுலகம் ஆகும்நாள் எந்நாளோ? அந்நாளே துன்பமெல்லாம் போகும்நாள், இன்பப் புதியநாள் என்றுரைப்பேன்! அன்னையெனும் தத்துவத்தை அம்புவிக்குக் காட்டவந்த மின்னே, விளக்கே, விரிநிலவே வாழ்த்துகின்றேன்!

குன்ற நாட்டுக் கொற்றவன் :

உங்கள் விருப்பம் உரைப்பீர்கள் இவ்விளைய சிங்கத்திற் கின்றே திருமகுடம் சூட்டிடலாம்! தீங்கு புரிந்த, சிறுசெயல்கள் மேற்கொண்ட காங்கேய னுக்கும் கடுந்தண்டனையிடலாம்!

ராணி :

கண்மணியே உன்றன் கருத்தென்ன நீயேசொல்!

சுதர்மன் :

எண்ணம் உரைக்கின்றேன்! என்உதவி வேந்தர்களே!

இந்த மணிபுரிதான்் இங்குள்ள மக்களுக்குச் சொந்த உடைமை சுதந்தர்கள் எல்லாரும்!