பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போர்மறவன்

1

(காதலனின் பிரிவுக்கு ஆற்றாதவளாய்த் தலைவி தனியே வருந்துகிறாள்.)

தலைவன்

என்றன் மலருடல் இறுக அணைக்கும்.அக் குன்றுதேர் தோளையும், கொடுத்த இன்பத்தையும் உளம்மறக்காதே ஒருநொடியேனும்! என்னை அவள் பிரிந்ததை எவ்வாறு பொறுப்பேன்! வான நிலவும், வண்புனல், தென்றலும் ஊனையும் உயிரையும் ஊக்கின் இந்தக் கிளிப்பேச் சோஎனில் கிழித்தது காதையே! புளித்தது பாலும்பூ நெடிநாற்றம்!

(காதலன் வரும் காலடி ஓசையிற் காதைச் செலுத்துகிறாள்.)

தலைவி

காலடி ஓசை காதில் விழுந்தது. நீளவாள் அரை சுமந்தகண் ணாளன் வருகின்றான் இல்லை அட்டியே!

2