பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைப் பாடல்கள்

(தலைவன் வருகை கண்ட தலைவி வணக்கம் புகலுகிறாள்.)

தலைவன்

வாழிஎன் அன்பு மயிலே, எனைப்பார்! சூழும்நம் நாட்டுத் தோலாப் பெரும்படை கிளம்பிற்று முரசொலி கேள்நீ விடைகொடு!

(தலைவி திடுக்கிடுகிறாள். அவள் முகம் துன்பத்தில் தோய்கிறது.)

தலைவி

மங்க்ை என்னுயிர் வாங்க வந்தாய்! ஒன்றும் என்வாய் உரையாது காண்க!

தலைவன்

பாண்டி நாட்டைப் பகைவன் சூழ்ந்தான்்! ஆட்டகை என்கடன் என்ன அன்னமே? நாடு தான்ே நாட்டைக் காப்பவர்? உடலும் பொருளும் உயிரும், ஈன்ற கடல்நிகர் நாட்டைக் காத்தற் கன்றோ? பிழைப்புக் கருதி அழைப்பின்றி வந்த அழுக்குளத்தாரிய அரிவைநீ அன்றே! ஒல்காப் பெரும்புகழ் தொல்பெரும் பழங்குடி நல்லியல் நங்கை, நடுக்குறல் தகுமோ? வென்றுவா என்று நன்று வாழ்த்திச் சென்றுவர விடைகொடு சிரிப்பொடும் களிப்பொடும்!