பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைப் பாடல்கள் 65

(இருவரும் விரைந்து சென்று அங்கிருந்த ஓர் குதிரை மேல் ஏறிப் புறப்படுகிறார்கள்.)

2

வியப்பு

(இருவரும் ஒரு சோலையை அடைகிறார்கள். குதிரையை ஒரு மரத்தில் கட்டி)

காதலன்

வந்து சேர்ந்தோம் மலர்ச்சோலைக்கண்! என்னிரு தோளும் உன்உடல் தாங்கவும், உன்னிரு மலர்க்கைகள் என்மெய் தழுவவும் ஆனது! நகரினை அகன்றோம் எளிதில்!

(இருவரும் உலாவுகின்றனர்)

சோம்பிக் கிடந்த தோகை மாமயில் தழைவான் கண்டு மழைவான் என்று களித்தாடு கின்றது காணடி! வியப்பிது!

(சிறிது தொலைவு செல்லுகிறார்கள்.)

இழிப்பு

காதலன்

குள்ளமும் தடிப்பும் கொண்ட மாமரத் திருகிளை நடுவில் ஒருமுகம் தெரிந்தது!