பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 பாரதிதாசன்

சுருங்கிய விழியான்; சுருண்ட மயிரினன்; இழிந்த தோற்றத்தான்் என்னபார்க்கின்றான்? நமைநோக்கி ஏனவன் நகருகின்றான்? உற்றுப்பார்! அவன் ஒருபெருங்கள்வன். காலடி ஓசை காட்டாது மெல்லஅக் கொடியோன் நம்மேற் குறியாய் வருவதை உணர்க! அன்புக் குரியாய் உணர்க!

(தம்மைநோக்கி வரும் அத் தீயனை இருவரும் பார்க்கிறார்கள்.)

வெகுளி

காதலன்

வெகுளியை என்உளத்து விளைக்கின்றானவன்! புலிபாய்ந்திடும்எனில் போய்ஒழிந்திடும்நரி!

(காதலன் கண்ணிற் கனல் எழுகின்றது. தன் உள்ளங்கை மடங்குகின்றது. அந்தக் கள்வன் தன்னை நெருங்குவதையும் காதலன் காணுகின்றான் காதலி காணுகின்றாள்.)

5

நகை

காதலன்

நட்டு வீழ்ந்தான்்நடைதடுமாறி!

கள்ளுண்டான். அவ் வெள்ளத்திலேதன் உள்ளம் கரைத்தான்்; உணர்விழந்தான்்.