பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

கதைப் பாடல்கள், கதை நாடகங்கள் எழுதினார். கற்பனை இன்றி கதைக் கலைப் பாடல்கள் என்பது இயலாததாகும். கதைப் பாடலின் அறிவுக் கூர்மை என்பது கற்பனையும் உண்மையும் கலந்து இணைந்து செல்வதாகும். அத்தகு தன்மைமிக்க கதைப்பாடல் கள் பலப்பல பாரதிதாசன் எழுதினார். அவற்றுள் தேர்ந்தெடுத்த சில இங்குத் தொகுப்பாக வெளி வருகின்றன. அடுத்த பதிப்பினால் இன்னும் பல சேர்ந்து வெளிவரும்.

இதற்குமுன் நாம் அறிந்திராத புத்தெண்ணங் களும் புத்துயிர்ப்புகளும் பாரதிதாசன் கதைப் பாடல் களில் புதையுண்டிருப்பதைக் காணலாம்.

தமிழகம் பயன் கொள்க.

- அன்பன், - த. கோவேந்தன்