பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைப் பாடல்கள் 69

காதலன் ஐயகோ அவள்தான்்! மாண்டாள். பொரிவிழிக் கள்வன் புயலெனத் தோன்றி அழகு விளக்கை அவித்தான்்! நல்ல கவிதையின் சுவையைக் கலைத்தான்் ஐயகோ! என்றன் அன்பே, என்றன் உயிரே! என்னால் வந்தாய், என்னுடன் வந்தாய். பொன்னாம் உன்னுயிர் போனது! குருதியின் சேற்றில் மிதந்ததுன் சாற்றுச் சுவையுடல்: கண்கள் பொறுக்குமோ காண உன்நிலை? எண்ணம் வெடித்ததே! எல்லாம் நீஎன இருந்தேன்; இவ்வகை இவ்விடம் இறந்தாய்! தனித்தேன், உய்விலை, தையலே, தையலே என்பால் இயற்கை ஈந்த இன்பத்தைச் சுவைக்குமுன் மண்ணில் சுவர வைத்துக் கண்ணி பெருக்கிநான் கதற வைத்தே! ஐயகோ பிரிந்தாய்? ஐயகோ பிரிந்தாய்!

9

அறநிலை கல்வி இல்லாரக்குக் கல்வி ஈகிலார் செல்வம் இல்லார்க்குச் செல்வம் ஈகிலார் பசிப்பிணி, மடமைப் பரிமேல் ஏறி சாக்காடு நோக்கித் தனிநடை கொண்டது! அன்போ அருளோ அடக்கமோ பொறுமையோ இன்சொலோ என்ன இருத்தல் கூடும்? வாழான் ஒருவன் வாழ்வானைக் காணின் வீழ இடும்பை விளைக்கின்றானே! வையம் உய்யு மாறு

செய்வன செய்து கிடப்பேன் இனிதே!

Ο Ο Ο குயில் - 1948