பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்லமுத்துக் கதை

- காட்சி - 1

திருமண முயற்சி

(விரசலூர் வெள்ளைய்யப்பன் மனைவியாகிய மண்ணாங்கட்டியிடம் கூறுகிறான்:)

உன்னைத் தான்ே! என்னசெய் கின்றாய்? இங்குவா இதைக்கேள்! இப்படி உட்கார்! பைய னுக்கு மணத்தைப் பண்ணிக் கண்ணால் பார்க்கக் கருதினேன். உன்றன் எண்ணம் எப்படி? ஏனெனில் பையனுக் காண்டோ இருபது ஆகிவிட்டது. பாண்டியன் தான்ோ, பழைய சோழனோ, சேரனே இப்படித் தெருவில் வந்தான்ோ! என்று பலரும் எண்ணுகின்றனர். அத்தனை அழகும் அத்தனை வாட்டமும் உடையவன், திருமணம் முடிக்கா விட்டால் நடையோ பிசகி விடவும் கூடும். நாட்டின் நிலையோ நன்றாயில்லை. சாதி என்பதும் சாத்திரம் என்பதும் தள்ளடா என்று சாற்றவும் தொடங்கினார். பார்ப்பனர் நடத்தும் பழமண முறையைப் பழிக்கவும் தொடங்கினர் பழிகாரர்கள். இளைஞரை, அவர்கள் இவ்வாறு கெடுப்பதே வளமையாக வைத்திருக்கின்றனர். இந்த நிலையில் எவளோ ஒருத்தியைப்