பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைப் பாடல்கள் 71

பையன் ஏறிட்டுப் பார்த்தால் போதும்; வெடுக்கென மணத்தை முடித்திடு வார்கள். என்ன? நான் சொல்வதெப்படி? ஏன்? உம்?

மனைவியாகிய மண்ணாங்கட்டி :

இன்றுதான்் பிறந்ததோ இந்த உறுதி? பையனுக்குப் பத்து வயசு தொடங்கியதிலிருந்து சொல்லி வந்தேன்; காது கேட்டதா? கருத்தில் பட்டதா? ஐயரை உடனே அழைக்க வேண்டும். பையனின் குறிப்பைப் பார்க்க வேண்டும். கிழக்குத் திசையில் இருக்கின்றாள் பெண்? சொத்துள்ளவளா? தோதான் இடமா?, மங்கை சிவப்பா?-மாஞ்செவலையா? என்றுபெண் பார்க்க இங்கிருந்துநாம் புறப்படவேண்டும்? புரிய வேண்டுமே.

வெள்ளையப்பன் :

புரோகிதன் நல்லநாள் பொறுக்குவான், அவனை இராகுகாலத்திலா இங்கழைப்பது? ஆக்கப்பொறுத்தோம் ஆறப் பொறுப்போம். நடத்ததை, இனிமேல் நடக்கப் போவதை, நடந்துகொண்டிருப்பதை நன்றாய்ச் சொல்வான். இடையில் குறுக்கிடும் தடைகள் சொல்வான். எல்லாம் சொல்வான். ஏற்படுகின்ற பொல்லாங்கெல்லாம் போக்கவும் முடியும். ஒருபொழுதுக்கான அரிசி வாங்க அரை ரூபாயையும் அவனுண்டு பண்ண முடியுமா? நம்மால் முடிந்த வரைக்கும் ஏற்பாடு செய்துகொண்டிட்டு வருவோம்.