பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைப் பாடல்கள் 77

காட்சி - 3

புதிய தொடர்பு

(அரசலூர் அம்மாக்கண்ணுவிடம் விரசலூர் வெள்ளையப்பன் சொல்லுகிறான் :)

நிறைய உண்டேன் நீங்கள் இட்டதைக் கறிவகை மிகவும் கணக்காய் இருந்தன. அரசலூர் வந்ததை அறிவிக்கின்றேன் : இரிசன் மகளை என்மகனுக்குக் கேட்க வந்தேன்; கேட்டேன் ஒப்பினான். சாப்பிடச் சொன்னான்; சாப்பாடு முடிந்தது; மாப்பிள்ளை பார்க்க வருவதாய்ச் சொன்னான்; சரிதான்் என்றேன்! வரும்வழி தன்னில் உன்னைப் பார்க்க உள்ளம் விரும்பவே வந்தேன் மிகவும் மகிழ்ச்சி கொண்டேன். பெண்குழந்தை பெறவில்லை நீ மருந்துபோல் ஒருமகன் வாய்த்திருக்கின்றான். அவனுக்கும் திருமணம் ஆக வேண்டும். உன்றன் கணவர் உயிருடன் இருந்தால் திருமணம் மகனுக்குச் செய்திருப்பார்.

(அரசலூர் அம்மாக்கண்ணு சொல்லுகிறாள் :)

அவர்இறந்தின்றைக் கைந்தாண்டாயின. பதினெட்டு வயது பையனுக்கு காயின. எந்தக் குறையும் எங்களுக்கில்லை. நன்செயில் நறுக்காய் நாற்பது காணியும் புன்செயில் பொறுக்காய் ஒன்பது காணியும் இந்த வீடும் இன்னொரு வீடும்