பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T8 - பாரதிதாசன்

சந்தைத் தோப்பும் தக்க மாந்தோப்பும் சொத்தாகத்தான்் வைத்துப் போனார். என்ன குறைஎனில் சின்ன வயதில் என்னை விட்டுச் சென்றார். பார்ப்பவர் ஏதும் பழுது சொல்லாது தனியே காலந்தள்ளி வந்தேன். இனிமேல் என்னமோ! யாரதை அறிவார்?

விரசலூர் வெள்ளையப்பன் சொல்லுகிறான் :

நடந்தது பற்றி நாவருந்தாதே. கடந்தது பற்றிக் கண்கலங்காதே. நான்இன்று மாலை நாலரை மணிக்கெலாம் விரசலூர் போக வேண்டும்! என்ன?

அரசலூர் அம்மாக்கண்ணு சொல்லுகிறாள் :

ஹ-ஹ நான்.அதை ஒப்ப மாட்டேன். இன்றிரவு நன்றாய் இங்குத் தங்கிக் காலையில், மசால்வடை சுட்டதும், சுடச்சுட வெண்ணெய் உருக்கும், மிளகாய்ப் பொடியும் தொட்டும் தோய்த்தும் ஒட்ட உண்டு சற்று நேரம் கட்டிலில் துயின்றால், இரவில்கண்விழித்த இளைப்புத் தீரும். திருந்த நடுப்பகல் விருந்து முடித்துப் போக நினைத்தால் போவது தான்ே?

விரசலூர் வெள்ளையப்பன் சொல்லுகிறான் :

அன்பு மிக்க அம்மாக் கண்ணே! பின்புநான் என்ன பேசமுடியும்?