பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 பாரதிதாசன்

இரிசன் :

உனக்குத் திருமணம் உடனே நடத்த என்மகளைத் தான்் உன்தந்தை கேட்டார் பெண்ணை உன்தந்தை பேசினார், பார்த்தார். நீயும் ஒருமுறை நேரில் பார்ப்பாய்.

நல்லமுத்து : -

அப்பா பார்த்தார் ക്ഷേ போதும். இரிசன் :

மணந்து கொள்வார் இணங்க வேண்டுமே? நல்லமுத்து :

அப்பா இணங்கினார்! அதுவே போதும்!

இரிசன் :

கட்டிக் கொள்பவர் கண்ணுக்குப் பிடித்தமா என்பது தான்ே எனக்கு வேண்டும். நல்லமுத்து :

பெற்ற தந்தைக்குப் பிடித்ததா, இல்லையா? பிடித்தம் என்றால், எனக்கும் பிடித்தமே!

இரிசன் :

என்மகள், ஒருமுறை உன்னைப் பார்க்க நினைப்பதாலே நீவர வேண்டும்.

நல்லமுத்து :

அப்பாவைப் பார்த்தாள் அதுவே போதும் அப்பா கருத்துக்கு அட்டி உண்டா?