பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைப் பாடல்கள் 83

இந்தராமாயணம் இயம்புவதென்ன? தந்தை சொல்லைத் தட்டலாகாதே என்று தான்ே இயம்புகின்றது?

இரிசன் :

மகிழ்ச்சி, தம்பி வருகின்றேன்நான்.

இரிசன் வெள்ளையப்பனிடம் :

நல்ல முத்து மிகவும் மதிப்பவன். அடக்க முடையவன் அன்பு மிகுந்தவன். பொழுது போயிற்றுப் போய்வருகின்றேன்.

வெள்ளையப்பன் :

போகலாம் நாளைக்குப் பொழுதுபோயிற்றே?

இரிசன் :

பொறுத்துக் கொள்க, போய்வருகின்றேன்.

வெள்ளையப்பன் :

போகலாம் நாளைக்குப் பொழுதுபோயிற்றே?

இரிசன் :

பொறுத்துக் கொள்க, போய்வருகின்றேன்.

காட்சி - 6

அம்மாக்கண்ணுக்கு ஆளானான் (அம்மாக்கண்ணும் வெள்ளையப்பனும்)

வெள்ளையப்பன் :

உன்றன் நினைவால் ஓடிவந்தேன் இரண்டு நாள்முன் இரிசன் வந்து