பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 பாரதிதாசன்

இரிசப்பன் :

உள்ளே வருவீர் வெள்ளையப்பரே! எப்போது வந்தீர்? இப்போது தான்ா? மனைவியார் உம்முடன் வந்திட வில்லையா? நல்ல முத்து நலமா? அமர்க.

வெள்ளையப்பன் :

மனைவி வயிற்று வலியோ டிருந்தாள்; பையன் நிலையைப் பகர வந்தேன்: திருமணம் வேண்டாம் என்று செப்பினான்.

இரிசப்பன் :

வெளியிற் சொன்னால் வெட்கக் கேடு வெள்ளையப்பரே வெந்தது நெஞ்சம். பேச்சை நம்பி ஏச்சுப் பெற்றேன். திருமணம் விரைவில் செய்ய எண்ணி எல்லாம் செய்தேன். எவர்க்கும் சொன்னேன். என்னை ஊரார் என்ன நினைப்பார்! எப்படி வெளியில் இனிமேற் செல்வேன்? மணம்வேண்டாமென மறுத்த தெதற்கு? அடங்கி நடப்பவன் அல்லவா உன்மகன்? நல்ல முத்தா சொல்லைத் தட்டுவான்? சொல்வதுதான்ே நல்லமுத்துக்கு.

வெள்ளையப்பன் :

நூறு தடவை கூறிப் பார்த்தேன்; வேண்டாம் மனமென விளம்பி விட்டான். மனம்புண்பட்டு வந்தே னிங்கே. அம்மாக் கண்ணுவின் அழகு மகனுக்குத்