பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைப் பாடல்கள் 89

அப்பா இல்லை! எப்படிமுடியும்? புரோகிதர் தம்மைப் போய ழைக்க அப்பா இல்லை! எப்படிமுடியும்? அரசாணிக்கால்நட, அம்மி போட, நலங்கு வைக்க, நாலு பேரை அழைக்க, நல்லநாள் அமைக்க, அம்மன் பூசை போடப்பொங்கல் வைக்க அப்பா இல்லை! எப்படி முடியும்?

இரிசப்பன் :

அப்பன் இல்லையே அதற்கென்ன செய்வது? நல்லமுத்து :

சோற்றை உண்டு சும்மா இருப்பது! மண்ணாங்கட்டி :

அம்மாக் கண்ணின் அழகு மகனுக்கு மகளைக் கட்டிவைக்கச் சொல்லிக் கெஞ்சினா ராமே அவரை இரக்கம் இருந்ததா இனிய தந்தைக்கே? நல்லமுத்து :

என்னருந்தந்தை இயம்பிய படியே இவரின் மகளை அவன்மணக் கட்டும். "தெருவில் என்ன பெரிய கூச்சல்" போய்வருகின்றேன் பொறுப்பீர் என்னை:

(நல்லமுத்து போனபின், இரிசனும், மண்ணாங்கட்டியும் பேசுகின்றார்கள்.)