பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 பாரதிதாசன்

மண்ணாங்கட்டி :

தன்மானம் இல்லாத் தடிப்பயல் என்மகன், உணர்ச்சி இல்லா ஊமை என்மகன். அடிமை எண்ணம் உடையவன் என்மகன். தனக்குப் பார்த்த தையலை, அப்பன் அயலான் மணக்கச் செயலும் செய்தால் துடிக்க வேண்டுமே தடிக்கழுதை மனம்! இல்லவே இல்லை! என்ன செய்யலாம் சாப்பிடுங்கள்! சற்று நேரத்தில் வருவான் பையன் ஒருமுறைக் கிருமுறை சொல்லிப் பார்ப்போம்; துன்பம் வேண்டாம்.

காட்சி - 9

தமிழ் உணர்ச்சி (இரிசப்பனும் மண்ணாங்கட்டியும் பேசியிருக்கிறார்கள்) இரிசப்பன் :

எங்கே போனான் உங்கள் பிள்ளை?

மண்ணாங்கட்டி

கூச்சல் கேட்டதாய்க் கூறிப் போனான்.

இரிசப்பன் :

என்ன கூச்சல்? எங்கே கேட்டது? மண்ணாங்கட்டி :

கேட்டது மெய்தான்், கிழக்குப் பாங்கில் வாழ்க தமிழே வீழ்க இந்தி என்று. இரிசப்பன்

எந்த உணர்ச்சியும் இல்லாப் பிள்ளை