பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதிதாசன்

பாரடா நீபோய்ப்பாவை தன்னை என்றால், அதையும் ஏற்க வில்லை. தரும்படி சொன்னார் தந்தை என்றால், அப்பா மனப்படி ஆகுக என்றான். இப்படிப் பட்டவன் என்ன செய்வான்? அப்பா அயலவள் அகத்தில் நுழைந்தார். இப்பக்கத்தில் இனிவாரார் ஆதலால் திருமணத்தை நீ செய்துகொள் என்றால், ஒலை விடுக்கவும், ஊரைக் கூட்டவும், சாலும் கரகம் தனியே வாங்கவும். பாத பூசைபண்ணிக் கொள்ளவும் அப்பா வேண்டும்என்று ஒப்பனை வைக்கிறான்.

அமுதனார் :

மடமையில் மூழ்கி மடிகின்றான் அவன். தன்மானத்தைச் சாகடிக் கின்றான், மரக்கட்டைபோல் வாழ்ந்து வந்தான்். இந்த நிலைக்கெலாம் ஈன்றவர் காரணர். ஆயினும் தமிழ்ப்பற்றவனிடம் இருந்தது. திராவிடர் கழகம் சேர்ந்து விட்டான். இனிமேல் அவனோர் தனியொரு மறவன்! அரசினர் சிறையில் அடைத்தார் அவனை!

இரிசப்பன் :

என்ன? என்ன? எப்போது விடுவார்?

மண்ணாங்கட்டி :

இருந்தும் பயனிலான் இருக்கட்டும் சிறையில்.

அமுதனார்:

எப்போது வருவான் என்பதறியோம்.