பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைப் பாடல்கள் . 95

இறப்புறல் எங்கள் இன்பத்தி னெல்லையாம். (வெள்ளையப்பனை நோக்கி இரிசன் சொல்லுகிறான்.)

வெள்ளையப்பரே வெளியில் போவீர் என்மகள் உம்மகன் இருவரும் நாளைக்குக் காதல் திருமணம் காண்பார். நீவிரோ அம்மாக் கண்ணொடும் அழகு மகனொடும் இம்மாநிலத்தில் இன்புற்றிருங்கள். (நல்லமுத்து தன் திருமணத்தின்பின், துணைவியுடன் இந்தி எதிர்ப்பு மறியலுக்குப் புறப்படுகின்றான்.) நல்லமுத்து :

வாழிய செந்தமிழ் வாழ்கநற்றமிழர் இந்தி ஒழிக. இந்தி ஒழிக! (சென்று கொண்டிருக்கையில், நல்லமுத்தின் தாய் அவர்களைத் தொடர்கிறாள்.)

மண்ணாங்கட்டி : இன்பத் தமிழுக்கின்னல் விளைக்கையில் கன்னலோ என்னுயிர்? கணவனும் வேண்டேன். உற்றார் வேண்டேன்; உடைமை வேண்டேன். இந்தி வீழ்க! இந்தி வீழ்க! திராவிடநாடு வாழிய! அருமைச் செந்தமிழ் வாழிய நன்றே!

1948

Ο Ο Ο