பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைப் பாடல்கள் 97

காலைக் கடன்முடித்துக் காப்பீர் விரைவாகக் காலைக் கடன்முடித்துக்க் காப்பி முடிந்துடனே வேலைக்குப் போவீரே என்று விளம்பக் கழுதைபோல் தன்னிரண்டு கால்கள் உயர்த்தி அழகுமனையாளை அப்படியேதான்ுதைத்தே தூக்கத்தில் வந்தெனக்குத் தொல்லை கொடுக்கின்றாய் போக்கற்ற நாயே நீ போடிஎனப் புகன்றான்.

普 骨 督

செம்போடும் தட்டோடும் சேயிழையாள் கூடத்தில் வெம்பும் உளத்தோடும் மீளவந்து பார்க்கையிலே மாமனார் வந்து மலைபோலக் காத்திருக்க ஊமைபோல் சென்றே உணவை எதிர்வைத்தாள். எங்கே உன் அத்தான்்? எழுந்திருக்கவில்லையா? எங்கிருந்து வந்தாய்நீ என்குடித்தனம்பெடுக்க? இன்னுமாதுங்குகின்றான்? ஏன்குரங்கே? மூஞ்சியைப் பார். ஒன்பதுக் கெழுந்திருந்து பத்துமணிக்கு ஊண்முடித்துக் கையில் குடையேந்திக்காலிற் செருப்பணிந்தே ஐயாதம் வேலைக்குச் சென்றால் அடுத்த நாள் வீட்டுக்குப் போக விடைபெறலாம் அல்லவோ? காட்டுக் குறத்திபோல் கண்னெதிரில் நிற்காதே! என்றுதன் பிள்ளை இழைத்த பிழைக்காகக் கன்னல் மொழியாள்மேல் காய்ந்து விழுந்தே மாமன் உண்ணத் தலைப்பட்டான் இட்டலியை ஒண்டொடியாள் எண்ணத் தலைப்பட்டாள்தன்னிலையை! என்செய்வான்.

博 骨 骨