பக்கம்:பாரதிதாசன் தாலாட்டுகள்.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தாலாட்டுப் பாடல்கள் 11

வளருமிடத்திற்கும் செல்லவேண்டும் போலும்!

கவிதைப் பொலிவு

தான்ாக வந்தமையும் மோனை எதுகையும், நினைக்க இனிக்கின்ற இலக்கியநயங்களும்,வாழ்க்கையில் தோய்ந்த அனுபவ முத்திரைகளும், நிலைத்த உண்மையும், பழகு தமிழே வழங்கும் உவமை முதலிய அழகுகளும், நல்ல சொல்லாட்சியும், தடையில்லா நடைப்பெருமையும் நோக்கி இலக்கியங்களை மதிப்பிட வேண்டும். தாய்மை தரும் தாலாட்டு இவ் வகையில் பெருமை பெற்று விளங்குகிறது. இப் பெருமையை உணர வேண்டமானால் நிலைபெற்ற பிற இலக்கியங்களோடு தாலாட்டை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

"கொத்துவிடாநெத்தும் கோதுபடாமாங்கனியும் பருவப் பலாச்சுளையும் பக்குவத்து மாங்கனியும் அக்கரையில் சர்க்கரையும் அதிமதுரத் தென்னவட்டும் காய்ச்சிய பாலுங் கற்ண்டும் செந்தேனும் ஏலங் கிராம்பும் இளங்கொடிக்கால் வெற்றிலையும் சாதிக் களிப்பாக்கும் சங்குவெள்ளைச் சுண்ணாம்பும்"

சீர்வரிசைகளாகக் கொண்டு வந்தார்களாம், குழந்தை பிறந்ததைப் பார்க்கவந்த அம்மான்மார்! இப்பாண்டிய நாட்டுத் தாலாட்டைச் சிலப்பதிகாரத்துடன் ஒப்பிட்டுக்காண்போம். பேரியாற்றங்கரையில் சேரன் செங்குட்டுவன் தங்கியிருக்கையில், குன்றக் குறவர்கள் கொண்டு வந்ததாக இளங்ககோவடிகள் குறிப்பிடும் காணிக்கைப் பொருள்கள் பற்றிய, பா நடையும் பண்பும், மேற்கண்ட தாலாட்டு வரிகளை நமக்க நினைவு